பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. விளையாட்டுக்கு விமர்சனம்! உலகம் என்பது ஒர் ஆடுகளம் (Play Ground). இதில் வாழும் மக்கள் அனைவரும், வாழ்க்கையெனும் ஆட்டத்தை ஆட வந்த ஆட்டக்காரர்களே (Players), உலக ஆடுகளத்தில் இன்பம் என்ற இலக்கு (Goal) எதிரேதான் இருக்கிறது. அதனை அடைய இயற்கை அமைத்துத் தந்துள்ள விதிகளின்படியே (Rules) ஆடிச் சென்று, இலக்குவை அடைய வேண்டுமென்பதே வாழ்க்கை ஆட்டத்தின் (Game) நோக்கமாகும், தவருக ஆடுபவர்கள் (Foul Game) அதற்குரிய தண்டனையை (Penalty) அடைகின்ருர்கள். கடவுள் என்ற நடுவர் தான். விதி எனும் துணை நடுவரின் துணையுடன் வாழ்க்கை ஆட்டத்தை நடத்தி வருகிரு.ர். வாழ்க்கை ஆட்டத்தில் காலம் (Time) என்ற பந்து ஒடுகிறது. பந்தை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி பக்குவ மாக ஆடுபவர்கள் இலக்குவை எளிதாக அடைகின்ருர்கள்.