பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


உறங்கும் நேரத்தைத் தவிர, உண்ணும் வேளையிலும் கூட விளையாடியே குழந்தை மகிழ்கிறது. ஏனெனில் விளையாட்டே குழந்தையை வளர்க்கிறது. வளர்த்து விடுகிறது. பள்ளிக்கூடத்து வகுப்பறையைவிட்டு வெளியே வரும் குழந்தைகளைப் பாருங்கள்! சுதந்திரப் பறவையாக விடுபட்டு, புறப்பட்டு வரும் வேக அம்புகளாக அல்லவா விரைந்து. வருகின்றனர் ஏன்? விளையாட்டுக் காந்தத்தில் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்கள்! விளையாட்டே குழந்தைகளின் வாழ்க்கையாகி விடுகிறது. பசியும் உறக்கமும் விளையாட்டால் மறந்து போகிறது. பிற குழந்தைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கும் பொழுது, சமுதாயப் பிணைப்பு பாச வலையாகப் பின்னிக் கொள்கிறது, இத்துடன் நின்று விடுவதில்லை. இளநெஞ்சங்களில் எந்தவிதக் கவலையும் எடுபடுவதில்லை. கவலை இல்லாத உலகத்திற்கு விளையாட்டு கூட்டிச் சென்று விடுகிறது. கரைகாணு இன்பச் சுனையில் கலம் செலுத்தத் துரண்டு கிறது. களிப்புணர்ச்சியில் கலைகள் பலவற்றையும் கற்றுத் தந்து பண்படுத்தி விடுகிறது. குழந்தைகள் அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக் கும் உரிய அனுபவங்களையெல்லாம் அருமை அருமையான சந்தர்ப்பங்களை அமைத்துத் தந்து தெளிவுபடுத்தி விடு கிறது விளையாட்டு. ஆமாம்! விளையாட்டு மன உணர்வில் அன்பு, பாசம், கருணை, நேசம், நீதி நியாயம் போன்ற பண்புகளை ஊட்டி, அவற்றினை செயல்படுத்தும் தேகத்தைத் தெம்புள்ளதாக மாற்றி அமைத்துத்தந்து விடுகிறது.