பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


காலம் மாறுகிறது. குழந்தைகள் வயதும் ஏறுகிறது. குடும்பச்சுமை அவர்களின் தலையிலே சுமத்தப்படுகிறது. கவலைகள் கனக்கவே, துள்ளல் குறைகிறது, சோகம் நிறை கிறது. துன்பம் தொடர்கிறது. பயணம் வளர்கிறது. பணமும் குணமும் போட்டியிட, பகைவரும் நண்பரும் வாட்டிவிட, பொது நலம் சுயநலம் போராடித் தள்ள: சூழ்ச்சியும் நீதியும் மோதிக் கொள்ள, வாழ்க்கை அவர்களை வரவேற்கிறது.வளைத்துக் கொள்கிறது. குழந்தையாக இருந்த பொழுது கொப்புளித்து எழுந்த குதுாகலம், கோலாகலம், களிப்பு, சிரிப்பு. பூரிப்பு, ஆரவார கேளிக்கை அவர்களிடம் இப்பொழுது இல்லை. அவர்கள் துவளும்போது விடை கேட்டுப் போய் விட்டதோ! ஏன்? வாழ்க்கை சுமையை ஏற்றபோது வாழ்க்கை சுவையை அவர்கள் மறந்து போனர்கள். துறந்து போளுர் கள். ஆமாம்! துன்பத்தை விரட்டும் சேவகன், துாய. இன்பத்தை நல்கும் தூதுவன், ஆரவாரத்துடன் வரும் துயரப்பகைவனை விரட்டும் ஆதவன்' என்றெல்லாம் புகழப் படுகின்ற விளையாட்டை அவர்கள் விட்டிொழித்து விட்டார்கள்! என்: “வயதாகி விட்டது. விளையாடினல் பிறர் கண்டு நகைப் பார்கள்’ என்ற ஒரு எண்ணம்! எங்கே தன்னை சின்னப் பையன் என்று எண்ணி விடுவார்களோ என்ற தவருன கருத்து! இப்படி தவருக எண்ணியே தண்ணிரில் விழுந்த எறும்பாகித் தத்தளித்துக் கொண்டிருக்கின்ருர்கள். விளையாடுவதை கேவலம் என்று மட்டும் அவர்கள் முடிவு கட்டிக் கொள்ளவில்லை. விளையாட்டை வேரோடு களைந்தெறிந்து இல்லாமல் செய்து விடவேண்டும் என்றும் முடிவு கட்டி, முற்றுப் புள்ளிை வைக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து நிற்பவர்கள் பலர் இன்று இருக்கின்ருர்கள்.