பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


பிற்கால வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்ற படிப்பினைகளை வளர்த்து விடும் ஆற்றல் பெற்றிருப்பதால் தான், குழந்தைகளை விளையாட விடவேண்டும் என்று அறை கூவி அழைத்தார் கிரேக்க நாட்டு தத்துவமேதை. அரி ஸ்டாட்டில் அவர்கள். விளையாட்டை ஆதரித்து வீழ்ந்த நாடும் இல்லை. விளையாட்டு வீரர்களைப் போற்றிப் பாதுகாத்து, ஆதரித்து பெருமை செய்த நாடுகள் வீழ்ந்ததாக சரித்திரமும் இல்லை. அதேபோல, விளையாட்டை மறைத்து, அழித்து, ஒப்பற்ற நாடுகளாக விளங்கிய நாடுகளும் இல்லை. இன்று உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற நாடுகளாக விளங்கும் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பாருங்கள்! அவைகள் விளையாட்டின் பெருமை தெரிந்து வளர்த்து, வளர்ந்த நாடுகள். அவைகளைப் பின்பற்றி கிழக்கு ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகள் உலக வரலாற்றில் பெருமை பெற்று விளங்குகின்றன. ஏன்! விளையாட்டுத் துறையை வளர்த்து அந்த நாடுகள் தங்கள் குடிமக்களை வீறுபெற்ற மக்களாக அல்லவா வளர்த்து வைத்திருக்கின்றன. விஞ்ஞானத்துறையிலும், பொருளாதரத் துறையிலும் முன்னேறி, விண்ணகத்துச் சந்திரனையும் விரட்டிப்பிடித்து விடுகின்ற அளவில் அல்லவா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ருர்கள்! அவர்களுக்கு நன்கு புரிந்திருக்கின்றது - உள்ளத்து உணர்ச்சிகளில் தலையாய பண்பு விளையாட்டுணர்ச்சி தான் என்பது. அத்துடன் அல்லாமல், விளையாட்டு வாழ்க்கை யுடன் இயைந்த, இணைந்த ஒன்று என்பது. விளையாட்டு, மனதுக்கு மறுமலர்ச்சி அளிக்க வல்லது என்பது. அதனால் தான் அவர்கள் விளையாட்டை வாழ்த்தி வரவேற்று பயன்படுத்திக் கொள்கின்ருர்கள். கொண்டிருக்கின்ருர்கள்.