பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


விளையாட்டில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, தினந்தோறும் பங்கு பெறுவோரும், விரும்பி ஈடுபடுவோரும்கூட, வலிமை யுள்ளவர்களாக மாறுகின்ருர்கள். குடும்பத்திற்குத் துரண் களாக இருந்து தாங்கிக் காக்கின்ருர்கள். தாயகத்திற்கு அங்கமாக இருந்து போராடித் திளைக்கின்ருர்கள். அதுமட்டு மல்ல. தங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல வாரிசு களையும் உருவாக்கித் தருகின்ருர்கள். கிரேக்கர்கள் ரோமானியர்கள் முற்காலத்தில் தங்கள் குடிமக்களையே சிறந்த போர் வீரர்களாக்கி வாழ்ந்திருக் கின்றனர். வலிமையின்றி வாழ்கின்ற பேடிகளை அங்கு காண முடியாத காட்சியாக இருந்திருக்கின்றது. அதற்காக அவர்கள் மேற்கொண்ட முறையானது, உடல் சிலிர்க்க வைப்பது போல் தோன்றுகிறது. மனிதாபிமானத்துடன் பார்த்தால், காட்டுமிராண்டித் தனமாகவும் நமக்குத் தோன்றும். கிரேக்க நாடுகளில் குறிப்பாக ஸ்பார்ட்டாவில் பிறந்த குழந்தையை சமுதாயப் பெருமக்கள் முன்னே கொண்டு வந்து காட்ட, அது குறையுடையதாக இருந்தால், கொண்டு போய் டாய்கிடஸ் காட்டிலே போட்டுவிட்டு வரக் கட்டளையிட்டு, நலமான குழந்தைகளேயே நாட்டில் வளர திட்டம் இட்டதாக உடி (Woody) எனும் வரலாற் ருசிரியர் கூறுகிரு.ர். பிறந்த குழந்தையை சாராயத்தில் அழுத்தி சோதனை செய்து, தப்பிப் பிழைத்த குழந்தையே வாழத் தகுதியுள்ள குழந்தை என்று தேர்ந்து வளர விட்டிருக்கின்ருர்கள். உயிர்ப்பிண்டமாகப் பிறந்தாலும், குறையுடன் பிறந்து இருந்தாலும், அவற்றை வாளால் கீறி புதைத்த தமிழினப் பரம்பரையும் வீரம் சான்ற மக்களையே ஏற்றுப் போற்றிக் கொண்டிருந்தது. _