பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 : அத்தகைய வீரமக்களுக்கும், போர் ஆற்றல் மிக்க வலிமையாளர்களுக்கும் உதவியவை உடற்பயிற்சிகளும், வீர விளையாட்டுக்களும் தான். வலிமையுள்ள மக்கள் தான் மதிநலம் நிறைந்த மக்களாகவும் விளங்கியிருக்கின்ருர்கள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தத்துவமேதை யராகிய பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மற்றும் உலகை வெல்லப் புறப்பட்ட வீரகிைய மகா அலெக்சாந்தரும் கூட பங்கு பெற்றதாகவும் வரலாறு சிறப்புற எடுத்துக் கூறியிருக்கிறது. ஒரு நாட்டின் எழிலார்ந்த செல்வ நிலையை விளக்க வந்த வள்ளுவப் பெருந்தகை, நாட்டிற்கு அழகு தருபவை ஐந்து என்ற கருத்தினைக் கீழ்வரும் குறளில் பாடுகின்ருர், பாருங்கள். பிணியின்மை, செல்வம், விளைவு இன்பம்ஏமம் அணியென்ப நாட்டிற்கு இவ்வைந்து. நாட்டிற்கு அணியாவன நோயின்மை, செல்வம், நல்ல விளைச்சல், இன்பம், காவல் என்கிரு.ர். நோயில்லாத மக்களால் தான் செல்வத்தை ஈட்ட முடியும், விளேச்சலைப் பெருக்க முடியும். இன்பத்தைப் பெற முடியும். அத்துடன் நில்லாமல், தாயகத்தைப் பகைவரிடமிருந்து காக்கின்ற செயலையும் செய்ய முடியும். பிணியில்லாத மக்களே நாட்டிற்கு நல்ல அணியாவார்கள். அஃதின்றி, நெடுந்துாணுக இரு கால்கள், வளைந்த முதுகுத்தண்டு, குச்சியான கைகள், கூடாக விலாவெலும்பு மூடியுள்ள உடலைத்தாங்கி நடமாடும் மக்கள் வாழும் நாடு சுடுகாடாகும். அந்நாடு அண்டை நாடுகளால் எளிதில் ஆக்ரமிக்கப்படும்.