பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


வீரமில்லாத மக்களுக்கு விவேகமும் இருக்காது. உரமில்லாத மக்களுக்குத் திறம் மட்டுமல்ல, தரமும் இருக்காது, அவர்களை நாடும் மன்னிக்காது. அதனால்தான், உடலில் உரமும் உள்ளத்தில் தெளிவும் நலமும், வாழ்க்கையில் இன்பமும் கிடைக்க, உடலை இயக்க வேண்டும் என்கிருேம். அந்த உடல் இயக்கம், விஞ்ஞான பூர்வமான உடல் இயக்கம், விளையாட்டு மூலமாகவே எளிதில் கிடைக்கிறது. எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களான காற்று நீர் போல, எளிதாக மட்டுமல்லாமல், இலவசமாகவும் கிடைக்கின்ற விளையாட்டுக்களைப் பயன்படுத்தி மேன்மை யாக வாழ்ந்து, உள்ளத்தை மேம்படுத்தி, தாம் பிறந்த இல்லத்தை மேம்படுத்தி, தான் சார்ந்த சமுதாயத்தை மேம்படுத்தி, அதன் வழியாக தாயகத்தையும் மேம்படுத்தி வாழ்பவர்களே மேன்மக்களாவார்கள். விளையாட்டு தம்மைப் பயன்படுத்திக் கொள்கின்றவர்களை எளிதில் மேன்மக்களாக்குகிறது.