பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


பிறகு கொஞ்சங் கொஞ்சமாக, இயக்கங்கள் இனிமை தரும் ஆட்டங்களாக, ஒட்டங்களாக மக்கள் கூட்டங்களில் குடி புகுந்தன. பிறகு, நல்ல விளையாட்டுக்களாக வளர்ச்சி யடைந்து பயன் பட்டன. ஆனல், அந்தக்காலத்திலிருந்தே எதிர்ப்பும், பதைப்பும் ஆரம்பித்து, இன்றும் கூட அவை தொடர்ந்து கொண்டு தான் வருகின்றன. "அறிவு அவ்வளவாக தெளிவடையாத காலத்தில்: எல்லாம் அவன் செயல், மனிதர்கள் சிந்திப்பதே பாவம்: என்று எண்ணி வாழ்ந்த காலத்தில், விளையாட்டை ஆடு வதும் பாபம், நினைப்பதும் பாவம் இதனை மீறி ஆடி ல்ை கொடுமையிலும் கொடுமை என்று அறிவுறுத்தப்பட்டு, அதன் காரணமாக மக்களால் விலக்கப்பட்டு வந்தது. விஷ ஜந்துக்களைக் கண்டு வெருண்டு விலகுவது போல : ஒடி ஒளிவது போல, விளையாட்டைக் கண்டு அவர்கள் மறைந்தோடினர். நினைப்பதில் கூட, நெருப்பைத் தீண்டு கின்ற நிலையினில் நெகிழ்ந்தனர். மன உலைச்சலையும் மக்கள் கொண்டிருந்தனர். காலம் கருத்துக் குருடர்களின் கண்களைத் திறந்ததுர் அறியாமை எனும் மஞ்சள் காமாலை நோய் அவர்களை விட்டு அகன்றது. அறிவொளி அவர்களின் பார்வையை புனிதப்படுத்தியது. விளையாட்டை ஆடுவதும் அதனை எண்ணிப்பார்ப்பதும் பாபமல்ல, ஆனல் அதை ஆடி ஏன் பொழுதை வீணுக்க வேண்டும்’ என்று கூறி, அறியாமை சிகரத்திலிருந்து ஒரு படி கீழே இறங்கி அறிவார்ந்த வர்களாக ஆகத் தலைப்பட்டனர். பொழுதைக் கொல்லும் சோம்பேறிகள், போக்கற்றவர் கள், பொருளற்று விளையாடி வீனகின்றனர்” என்ற அவர்