பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


இருக்கின்றன? அது எப்படி! அது தான் விளையாட்டின் பெருமை! வாழவைத்து வாழ்கின்ற வளர்மதிபண்புகளில்ை தான் விளையாட்டு வாழ்ந்தது, வாழ்கிறது, இன்னும் வாழும், வளரும். இத்தகைய இனிய விளையாட்டானது தொடங்கியது எப்பொழுது? எந்தக் காலம்? ஏன்? என்ற வின எழும்புவது இயற்கை தான். விளையாட்டின் தொடக்கத்தை யாரும் அறியார்! ஆனல் உலகம் தோன்றியதிலிருந்து விளையாட்டும் தோன்றியிருக் கிறது என்பது மட்டும் உறுதி. இந்த உண்மையை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது. உயிரெடுத்து பிராணிகள் தொடங்கியதிலிருந்து விளையாட்டு தொடங்கியது என்ருலும், இந்தக் கூற்று பொருந்தும், அவ்வளவு பழமை மிகுந்தது விளையாட்டாகும். என்ருலும், இதன் தொடக்கத்தை ஆராயப் புகுந்த அறிஞர் பெருமக்கள், ஒரு சில சூழ்நிலைகளை ஆராய்ந்து, அரிய உண்மைகளையும் வெளிப்படுத்தி இருக்கின்ருர்கள். "நாட்டில் விளைந்த பண்பாட்டின் முதிர்ச்சியால் எழுந்து தொடங்கியதே விளையாட்டு’ என்பார் சிலர். மக்களின் வாழ்க்கை நிலையிலே நடந்த சில சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து. அதன் அடிப்படையிலே விளையாட்டாகத் தொடங்கியிருக்கலாம். அந்த நிகழ்ச்சிகள் இன்பகரமானதாகவும் இருந்திருக்கலாம், துன்பகர மானதாகவும் இருந்திருக்கலாம். பொது இடங்களில், மக்கள் சந்திக்கும் இடங்களில் எதிர்பாராத விதமாக நடந்து விட்ட நிகழ்ச்சியின் கருவாக உருவாகி, உயிர்ப் பெற்று இவ்வாறு விளையாட்டாகத் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறுகின்ருர்கள் சிலர்.