பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


"மக்களை வீரர்களாக, விவேகிகளாக, பண்பாளர்களாக மாற்ற விளையாட்டால்தான் முடியும். வளர்ந்து வரும் நாடு ஒன்றுக்கு சிறந்த செல்வம் விளையாட்டுதான்.” இப்படியாக, விளையாட்டு பற்றிய கருத்துக்கள் மாறி மறுமலர்ச்சியடைந்து மக்கள் மன்றங்களில் பேசப்பட்டும், பின்பற்றப்பட்டு வருகின்ற பேரின்ப நிலையை அடைந்தது. விளையாட்டு காலத்தால் முதியது. தான் கொண்ட கோலத்தால் இனியது. இளமையானது. ஆமாம். கல் தோன்றி மண்இோன்ருக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த குடிளுடன் தோன்றிய ஒன்றல்லவா இது! மக்களால் விளையாட்டு விரும்பப்படாமல் இருந்திருந் தால், இந்நேரம் அது ஒழிந்தே போயிருக்குமே! இன்னும் இது புதிது புதிதாகத் தோன்றி, பெருமையின், சிகரமாக விளங்குகிறது என்ருல், அதன் பெருமை தான் என்னே! கையால் சூரியனை எத்தனை நேரம் மறைக்கக்கூடும்! அல்லது குடையைக் கொண்டு தான் மறைக்க முடியுமா? எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி, வளர்ந்து, மலர்ந்து, ஒழிந்தன. மண்மேடாயின. வரலாற்றுக் குறிப்புக் களாயின. ஆனால், பொற்காலம் கண்ட நாடுகளில் எல்லாம் பெயர் பெற்று விளங்கிய விளையாட்டானது, பொற்கால நாடுகள் அழிந்து பட்ட போதிலும், புடம் போட்டத் தங்கமாக அல்லவா மிளிர்ந்து ஒளிர்ந்திருக்கிறது! ஏன்? எப்படி? அழிந்த நாடுகளுக்குள்ளே இருந்த விளையாட்டுக்கள், அன்றைய காலத்தை விட ஆயிரம் மடங்கு வளர்ச்சியுற்று