பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


1. உடல் இயக்க விளையாட்டு பொதுவாக நலம் என்ருல், உடல் நலத்தையும் உள்ளத்தின் நலத்தையுமே குறிக்கும். அதுபோலவே வளர்ச்சி என்ருலும், அது உடல் வளர்ச்சியையும் உள்ளத் தின் வளர்ச்சியையுமே குறிக்கும். அதுவே, மனிதனது முழு வளர்ச்சியையும் சுட்டிக் காட்டும் குறிப்புமாகும். இரண்டையும் வலிமையுள்ளதாக வைத்திருப்பவனேயே மனிதன் என்கிருேம். உடலை வளர்த்து, உள்ளம் வளராதவனை உதியமரம் போல் என்கிருேம். அ றிவில் நிறைந்து உடலில் நலிந்தவனே ஒன்றுக்கும் உதவாதவன் என் கிருேம். அவ்வாறு இல்லாது, சம வளர்ச்சி தரும் சந்தர்ப்பங்களே உடலுக்கும் உள்னத்துக்கும் தரவே, உடல் இயக்க விளையாட்டுக்கள் உதவுகின்றன. விளேயாட்டுக்களே பெரு விளையாட்டுக்கள் அல்லது முதன்மை விளையாட்டுக்கள் (Major Games) என்றும், சிறு விளையாட்டுக்கள் (Minor Games) orgârgylh இருவகையாகப் பிரிப்பார்கள். கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை முதன்மை விளையாட்டுக்கள் என்றும், பூப்பந்தாடடம், கேரம், டென்னிஸ், மேசைப் பந்தாட்டம் சடுகுடு, கோகோ போன்ற ஆட்டங்களே சிறு விளையாட்டுக் கள் என்றும் கூறுவார்கள். | விளையாட்டுக்கள் எந்த வகையினதாக இருந்தாலும், உடல் உறுப்புக்களை இயக்கி வலிமையுடையனவாக, ஒன்று பட்டு சீராக இயங்குவனவாக மாற்றும் பணியில் ஈடுபடு வதையே இயக்க விளையாட்டுக்கள் என்கிருேம். ஆட்டத்தில் உள்ள திறன் நுணுக்கங்களை வளர்த்து விடுவதுடன்,