பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த அடிப்படையில் பார்த்தால், விளையாட்டினல் விளையும் இன்பத்தை நாம் இரண்டு வகையாகப்பிரிக்கலாம். ஒன்று விளையாடி மகிழ்வது. மற்ருென்று விளையாட்டைக் கண்டு மகிழ்வது. விளையாடித் திகழ்பவரின் உடல் உறுப்புக்கள் உழைப்பில் ஈடுபடுகின்றன. இயக்கம் பெறுகின்றன. மனமும் சுகம் பெறுகின்றது. அது போலவே, விளையாட்டைப் ரசித்துப் பார்ப் போருக்கும், அவரது புலன்கள் உணர்ச்சியால் உந்தப் பெறுகின்றன. எழுச்சியடைகின்றன. மனதிலே சுகமான சூழ்நிலை சுற்றிப் பறந்தாடி மனேகரமான இன்ப லயத்தை எழுப்புகின்றன. స్కో 莓 இவ்வாறு விளே பாடிக் கொண்டும் பிறர் விளையாடக் கண்டும் இன்பம் தருகின்ற விளை யாட்டுக்களை, மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவார்கள் விளையாட்டுத்துறை வல்லுநர்கள் . 1. உடல் இயக்க விளையாட்டு (Motor play) 2. புலனுணர்வு விளையாட்டு (Sensory play) 3. * soué4, affo usri G (intellectual play) இவ்வாறு பிரிந்து நிற்கின்ற விலை யாட்டுக்களின் நோக்கமாவது மனித குலத்திற்கு மாரு த இன்பத்தையும், மன மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்பதே தான். அப்படி யாளுல், இந்த மூன்று விதப் பிரிவிலே உள்ள விளையாட்டுக்களின் நோக்கத்தையும் தன்மையையும் விரிவாகவே நாம் இங்கே கானுவோம்!