பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


எந்த விளையாட்டாக இருந்தாலும், விளையாட்டின் நடப்பு காலத்தைப் பற்றிப் பேசினலும், நடந்த காலத்தைப் பற்றிப் பேசினலும், இயற்கையாகவே பேச்சில் இனிமை கொஞ்சம் தொட்டுக் கொள்ளும்! எழுச்சி அதனுட்ன் ஒட்டிக் கொள்ளும். பேச்சுக்களை கட்டிக் கொள்ளும். பிறகு தங்களை மறந்து விளையாட்டைப் பற்றியே பேசத் தொடங்கி விடுவார்கள் புதிய நண்பர்கள். இயற்கைக்குப் பிறகு விளையாட்டே இப்படி மக்களை ஒன்று படுத்தும் மேடையாகத் திகழ்கிறது. அரசியல் இல்லையா என்பீர்கள், அது ஆரம்பத்திலே உரசலில் ஆரம்பித்து முடியும் பொழுது விரிசலில் காண்டு வரும் என்பதால், இதன. இங்கு சேர்ப்பதற்கு இல்லை. அந்த அளவுக்கு இயற்கையும் விளையாட்டும் மக்களின் மனதிலே மாரு த இடம் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. ஏனெனில், மக்களின் மனதிலே விளையாட்டு கவர்ச்சியான இன்பச் சலனத்தை ஏற்படுத்துகிறது. ஆனந்தம் சிறைந்த அமைதியையும் கூடவே அழைத்துக் கொண்டு வருகி t பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் விளை யாட்டை, மற்றவர்களுக்குப் பிடிக்க வில்லே என்று தெரிந் தாலும் பெருமையாகப் பசிக் கொண்டு போவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சியாகும். பிறர் முகத்தை சுளிக்கிருர் என்ருலும் அவர்கள் பேச்சை நிறுத்துவது மில்லை. முடிப்பது மில்லை. குழந்தைகள் விளையாடி தங்களுக்குள்ளேயே இன்பம் காண்கின்றனர். அந்தக் காட்சியைக் காணுகின்ற பெற் ருேரும் பார்த்துப் பார்த்துப் பேரின்பம் பெறுகின்றனர். அங்கே பிற எண்ணங்கள், நோக்கங்கள் விணு எழுவது மில்லை. விழுவதுமில்ல. --".