பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விளையாட்டின் நோக்கம்

  • சே! என்ன கொடுமையான வெயில்! வெளியே தலை காட்ட முடியவில்லை போங்கள்!

காற்ருகவா அடிக்கிறது! பேய்க் காற்ருக அல்லவா அடிக்கிறது! கண்ணை விழிக்க முடியவில்லையே! கண்னெல் லாம் மண் விழுந்து விட்டதே!?? 'இந்த மழையைப் பாருங்கள். வேண்டும் என்று வரம் கிடந்தால் வராது. வேண்டாம் என்று நிற்கும் பொழுது தான் கொட்டும். இது காய்ந்தும் கெடுக்கும். பேய்ந்தும் கெடுக்கும்.' - முன் பின் அறிமுகம் இல்லாத இருவர் தனியே இருக்கும் பொழுது தங்களுக்குள்ளே பேச்சைத் தொடங்கிக் கொள்ள இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். ஒருவர்பேசுவார், மற்றவர் ஆமாம் போடுவார். மற்றவர் விமர்சிப்பார். இப்படியாக இயற்கை பற்றிய உருக்கமான பேச்சு, தொடர்ந்து பின்னர் நெருக்கமான உறவை நிலை நாட்டிக்கொள்ளும். அறிமுகம் இல்லாதவர்களுக்கிடையே பேச்சை ஆரம்பிக்கவும் இயற்கையும் கால நிலையும் கொஞ்சம் இடம் விட்டு ஒதுங்கில்ை, ஓடி வந்து அடுத்துப் பிடித்துக் கொள்வது விளையாட்டுதான், ---