பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ) இவறைய நாளில் விளையாட்டின் பெருமையானது இன்றும் ஒரு படி அதிகமாகவே புகழப்படுகிறது. உலகின் உலக சல் நிலையிலிருந்தும் உள்ளத்தின் தொல்லைச் சுமை யினினறும் விடுபட்டு, அவற்றை மறந்து, தனது சொந்தத் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தி:- விளை யாட்டு நல்ல வழியமைத்துத் தருகிறது என்பதை உணர்ந்து கொண் டனர் உலகத்தினர். 'மனிதனுக்கு சீக்கிரம் முதுமை வந்து விடுகிறது. ஏனென்ருல் அவன் விளையாடுவதை நிறுத்தி விட்டான் என்பதால்தான். ஏனெனில் விளையாட்டானது உடல் உணர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் ஒர் அடிப்படை ஆதாரமாகும்’ என்கிருர் ஸ்டேன்லி ஹால் என்பவர். ஆகவே, பல்வேறு காரணங்களுக்காக மக்கள் விளையாடு கின்ருர்கள் என்கிற கருத்துக்களை பல்வேறு அறிஞர்கள் கூறினுலும், பங்கு பெறுவோர் எல்லோரும் ஒய்வுக்கும், மகிழ்ச்சிக்கும். சிறந்த வாழ்க்கையைப் பெறும் பண்புகளுக் காகவும், பயிற்சி பெறுவதற்காக வும் தான் விளையாடு கின்ருள்கள் என்பதே ஒத்துக் கருத்தாக, உண்மைக் கருத்தாக இருக்கின்றது. இவ்வாறு, உயர்ந்த கருத்துக்களுடனே உலகைக் கவரும் பண்பு பெற்ற விளையாட்டின், நோக்கம் என்ன, அது எப்படி நிறைவேறுகிறது, நிலைநாட்டப்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வோம்.