உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


உயர்தரப் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றதும் அப்டன் ஸிங்க்ளர் நாவல்கள் எழுதத் தொடங்கினார். பகல் வேளையில் கல்லூரிப்படிப்பு. இரவில் நாவல் எழுதும் வேலை, இப்படியுமாக, அவர் தம்முடைய படிப்பிற்கும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குமாக முதலிலிருந்தே இலக்கியத்தின் உதவியை நாடினார்.

அப்டன் ஸிங்க்ளர் பெரிய கதாசிரியராக ஆன பிறகு, தம்மைப்போல் கஷ்டப்படும் எழுத்தாளர்களை மறந்து விடவில்லை. அவர் சம்பாதித்த பணத்தைக் கொண்டே ஒரு காலனி ஏற்படுத்தி அங்கே பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரை வந்து குடியேறியிருக்கச் செய்தார்.

அப்டன் ஸிங்க்ளர்இலக்கிய மேதை மாத்திரம் அல்ல. சிறந்த சீர்த்திருத்தவாதியும்கூட. அவருடைய குடும்பம் வறுமையினால் கஷ்டப்பட்டது என்பதுடன், அவருடைய தகப்பனார் குடிகாரராக இருந்ததும் ஒரு காரணம் அதனால் அவர் குடியை வெறுத்தார். மதுபானம் செய்வதையே ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் அப்டன் லிங்க்ளர். சோஷியலிஸ்டு கட்சியில் அப்டன் லிங்க்ளருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அக்கட்சியின் கொள்கைகள் அவருக்கு பிடித்திருந்தது அதனால் அதில் சேர்ந்து சேவை புரியலானார்.

வறுமையில் கஷ்டப்பட்டபோது அப்டன் ஸிங்க்ளர் ஒரு சாதாரண இடத்தில வசித்து வந்தார். ஆனால்,