பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14
துன்பத்திலே இன்பம் காண்பவர்


ஹாவர்ட் தர்ஸ்டன் என்பவர் ஒரு சமயம் நியூயார்க் நகரத்திற்கு போக வேண்டியிருந்தது அவர் ரயில் நிலையத்துக்கு வந்து டிக்கெட் வாங்கப் போகும் சமயம், ஞாபக மறதியாக ஸிரகாஸ் என்ற இடத்திற்கு வாங்கி விட்டார். இந்தத் தவறு, அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அவரை பிரபல மாயாஜாலக்காரராக ஆக்கியதும் அந்தத் தவறுதான்.

ஹாவர்ட் தர்ஸ்டன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு பையனாக இருக்கும்போது அவர் வேலைகளைச் சரியாகவே செய்யமாட்டாராம். அதனால் கோபம் கொண்ட தகப்பனார் அவரை நன்றாக அடித்துவிடுவாராம். இதனால் சிலசமயம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அடிக்குப் பயந்து தர்ஸ்டன் சில நாட்களுக்கு எங்காவது ஓடிவிடுவாராம். பையனைக் காணாமல் பெற்றோர் தவித்துக் கொண்டிருப்பார்கள் அந்தச் சமயத்தில் பையன் வந்தால் அடி கிடைக்காமல் இருக்கும்.