பக்கம்:வாழ்க்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
அன்பின் உதயம்

பகுத்தறிவுள்ளவன் தன் தனி இன்பத்திற்காக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் அவனுக்கு எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு வேறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரண்டிற்கும் நடுவே அவன் திண்டாடித் துயருறுகிறான்.

மனிதன் ‘நான்’ என்று தன் மிருக இயல்பை கருதுகிறான். மற்றோர் இயல்பான பகுத்தறிவு உணர்ச்சியும் ‘நான்’ என்று சொல்லுகிறது. முதலாவது ‘நான்’ கீழ்த்தரமானது, இரண்டாவது ‘நான்’ உயர்வானதைக் குறிக்கிறது. மிருக இயல்பை ‘நான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/100&oldid=1122179" இலிருந்து மீள்விக்கப்பட்டது