பக்கம்:வாழ்க்கை.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
107
 

கண்களை மூடிவிட்டதால் அவன் எங்குச் செல்கிறான் என்பது அவனுக்குத் தெரியாது........ சொல்லால்; நாவால் மட்டும் நாம் அன்பு செலுத்தக் கூடாது, செயலில், உண்மையாகவே அன்பு செலுத்த வேண்டும். இதனால் நாம் உண்மையின் பக்கம் இருக்கிறோம் என்று நம் இதயத்தைத் திருப்தி செய்துகொள்ள முடியும்....... இதனால் நம்மிடம் அன்பு பரிபூரணமான நிலையை அடைகிறது; இதன் மூலம் தீர்ப்பு நாளன்று நாம் தைரியமாயிருக்க முடியும்; ஏனெனில், அவரைப் போல நாமும் இவ்வுலகில் இருப்போம். அன்பில் பயம் எதுவுமில்லை; உண்மையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. ஏனெனில், அச்சம் துன்பந் தருவது : பயமுள்ளவன் அன்பில் பூரணனா யிருக்க முடியாது.”[1]

இத்தகைய அன்புதான் மனிதனுக்கு உண்மையான வாழ்வை அளிக்கிறது.

‘உங்கள் கர்த்தனான இறைவனை உங்கள் முழு இதயத்துடனும், ஆன்மாவுடனும், உள்ளத்துடனும் நேசிக்க வேண்டும். இதுவே முதலாவதும் முதன்மையானதுமான கட்டளை.’

இரண்டாவது உபதேசமும் இதைப் போன்றது. ‘உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் உங்களைப் போல் நேசியுங்கள்’ என்று கிறிஸ்துவிடம் வழக்கறிஞர் கூறினார். இதற்குக் கிறிஸ்து நாதர், ‘சரியாகப் பதில் சொன்னீர்கள் : இந்தப்படி செய்யுங்கள்-கர்த்தனையும், உங்கள் அண்டை வீட்டுக்காரரையும் நேசியுங்கள். நீங்கள் வாழ்வடைவீர்கள்!’ என்று மறு மொழி கூறினார்.


  1. பரி. யோவானின் சுவிசேஷம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/114&oldid=1122197" இருந்து மீள்விக்கப்பட்டது