பக்கம்:வாழ்க்கை.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
வாழ்க்கை
 

அன்போடும் பொருந்திய வாழ்க்கை சாத்தியமாயிருப்பினும், அதை மறந்து விட்டுப் பெரும்பாலான மக்கள் அல்லற்படுகிறார்கள். ஒரு கட்டடத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளும்பொழுது, அதிலுள்ள ஆடுகளை வெளியேற்ற முயற்சி செய்கையில், அவைகள் தங்களை நெருப்பிலே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணித் தங்கள் முழு பலத்துடன் வெளியேற மறுப்பது போலவே இவர்களுடைய நிலை இருக்கின்றது.

மரண பயத்தினாலேயே மனிதர் மரணத்தை விட்டுத் தப்ப விரும்பவில்லை ; துன்பத்தைக் கண்டு பயந்து, அவர்கள் துன்பத்திலேயே ஆழ்ந்துவிடுகிறார்கள். இதனால் உண்மையான வாழ்க்கை நலனையும் அவர்கள் இழக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/119&oldid=1122202" இருந்து மீள்விக்கப்பட்டது