பக்கம்:வாழ்க்கை.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122
வாழ்க்கை
 

தத்துவம் நிறைந்த கேள்விபோல் தோன்றுகிறது. ஆனால், சிறு குழந்தைகூட இதற்குப் பதில் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாளும் குழந்தை, ‘இதை நான் விரும்புகிறேன். ஆனால், அதை நான் விரும்பவில்லை’ என்று பல தடவை சொல்லக் கேட்கிறோம். இந்த வாக்கியத்திலேயே உண்மை அடங்கியிருக்கிறது.

இந்த வார்த்தைகள் மிகச் சாதாரணமானவை. இவையே பல்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து, ‘நான்’ என்ற உணர்வைக் கொடுப்பவை. நான் இதை விரும்புகிறேன். ஆனால், அதை விரும்பவில்லை. ஏன் இதை விரும்புகிறேன், ஏன் அதை விரும்பவில்லை என்பதற்கு யாருக்குமே காரணம் தொரியாது. ஆயினும், ஒன்றை விரும்பி, மற்றதை விரும்பாத இந்த நிலையே மனிதன் உணர்ச்சிகளை ஒன்றாகத் தொகுத்து ‘நான்’ என்ற அகத்தை நிலைக்கச் செய்கிறது. உலகையும் அதிலுள்ள பொருள்களையும் கண்டு மக்களின் உள்ளங்களில் சில கருத்துக்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒருவர் கருத்து மற்றவர்கள் கருத்துக்களைப் போலில்லை. ஒவ்வொருவரும் வெவ் வேறு கருத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் அவரவருடைய விருப்பமே. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான விருப்பமுடையவர். ஒன்றில் அதிக ஆசையும், மற்றொன்றில் குறைந்த ஆசையும் கொள்வதே மனிதனின் தனிப் பண்புக்கு, அதாவது ‘நான்’ என்ற உணர்வுக்குக் காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான பண்பைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/129&oldid=1122351" இருந்து மீள்விக்கப்பட்டது