பக்கம்:வாழ்க்கை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

137


தொடர்பு கொண்டோ, செயல் புரிவதில் அளவு முக்கியமில்லை. ஆனால், பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையில் மற்றவர் நலன்களைப் பேணி, அன்பைப் பெருக்கிக்கொண்டு வந்தால், அவர் கிறிஸ்துவா யிருந்தாலும், நல்ல மனிதரா யிருந்தாலும், பிரசித்தி பெறாதவரா யிருந்தாலும், கிழவராயினும் சிறுவயதினராயினும், ஸ்திரீயாயினும், அவருக்கு, மரணமில்லை. ஏனெனில், உடலோடு இருக்கும் பொழுதே, அவர் உலகத்துடன் ஒரு தொடர்பு கொண்டு விடுகிறார்; அந்தத் தொடர்புக்கு மரணம் கிடையாது. அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே எல்லா மனிதர்களுக்கும் இவ் வாழ்க்கையில் முக்கியமான காரியம்.

நித்தியமான வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விடாது. இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கு முன்பே அழியா வாழ்வு அமைந்திருக்க வேண்டும். அதற்கு நமது வாழ்க்கையைச் சிரஞ்சீவியாக்குவது எது என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வதற்கு, ஒருவன் தன் வாழ்க்கையில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்திருக்க வேண்டும்; இந்த வாழ்கையிலேயே உலகத்துடன் இதற்கு முன் இல்லாத புதுத் தொடர்பை அமைத்துக் கொண்டிருந்தால் தான் அது சாத்தியமாகும்

உலகத் தொடர்புகளில் குழப்பம்

மனிதனுடைய பகுத்தறிவு உணர்ச்சி, மிருக உணர்ச்சி, உடலாகிய சடப்பொருள் ஆகிய மூன்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/144&oldid=1122368" இலிருந்து மீள்விக்கப்பட்டது