பக்கம்:வாழ்க்கை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வாழ்க்கை


இன்ப நிலையை உண்டாக்குகிறது. மிருகத்தின் வாழ்வும், மனிதனின் வாழ்வும், துன்பத்தால் சலனமடைந்து சிதைவதில்லை. வாழ்வின் இலட்சியமே அதன் மூலம் நிறைவேறுகிறது. எனவே, வாழ்வுக்குத் தூண்டுகோலாக அமையும் துன்பங்கள் இருந்தே தீரவேண்டும் என்று ஏற்படுகிறது. இப்படியிருந்தும் மனிதன் ‘ஏன் எதற்காக, இந்தத் துன்பம்?’ என்று கேட்பதன் பொருள் என்ன?

மிருகம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.

பெரிய மீன் சின்ன மீனை வதைக்கும் போதும், சிலந்திப்பூச்சி ஈயை வதைக்கும் போதும், ஓநாய் ஆட்டை வதைக்கும் போதும் அவை தாம் செய்ய வேண்டியதையே (கடமைப்பட்டதையே) செய்வதாக எண்ணுகின்றன; என்ன நடக்கிறதோ அது நடந்தே தீரவேண்டிய காரியமென்று எண்ணுகின்றன. இதே போல், பெரிய மீன், சிலந்தி, ஓநாய் ஆகியவற்றை அவைகளைவிட வலிமையுள்ள பிராணிகள் வதைக்க வரும்போது, அவைகள் தாங்கள் எப்படியும் தப்பித்து ஓடவேண்டு மென்று எண்ணுகின்றன. இதைச் செய்வதே தங்கள் இயற்கை என்று எண்ணுகின்றன. எனவே, அவைகள் தங்களுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டுத் தீரவேண்டியவை என்று கருதுகின்றன. ஆனால், மனிதன் மட்டும் அப்படி எண்ணுவதில்லை. மனிதன் போர்க்களத்தில் பல மனிதர்களுடைய அங்கங்களை முறித்தெறிகிறான்; ஆனால், தன் அங்கங்கள் காயமடைந்ததும், அதே களத்திலிருந்து கொண்டு அவைகளுக்குச் சிகிச்சை செய்கிறான். அவன் உணவுக்காக ஆயிரக்கணக்கான விலங்குகளை வதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/155&oldid=1123867" இலிருந்து மீள்விக்கப்பட்டது