பக்கம்:வாழ்க்கை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
வாழ்க்கை
 

ஒருவனுடைய பிறப்புக்கு முன்னும், மரணத்திற்குப் பின்னாலுமே அது கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மை கிடைக்க வேண்டுமானால், எங்கள் கொள்கைகளை நம்பி, நாங்கள் விதித்துள்ள சமயச் சடங்குகளை முறையாக நடத்தி வரவேண்டும் ?’

சந்தேகம் கொண்டவனுக்கு இந்தப் பதில் திருப்தியளிப்பதில்லை. அவன் இதை ஆராய்ந்து கூடப் பார்க்காமல் ஒதுக்கிவிடுகிறான். சமயத் தலைவர்களும் தங்கள் வாழ்க்கையில் தன்னைப் போலவே தத்தளிப்பதை அறிந்து, அவன் விஞ்ஞானம் வழி காட்டுமா என்று பார்க்கிறான். போலி விஞ்ஞானிகள் அவன் முன்பு தென்படுகின்றனர்.

அவர்கள் கூறும் பதில் இதுதான் : ‘வெளிப்படையாகத் தெரியும் மிருக வாழ்க்கை தவிர வாழ்வைப் பற்றிய மற்றப் போதனைகளெல்லாம் அறியாமையால் தோன்றியவை. உன் சந்தேகங்கள் வெறும் கனவுகள். பிரபஞ்சத்திலே அண்டங்கள், பூமி, மனிதன், விலங்கினம், தாவர வர்க்கம் ஆகியவற்றின் வாழ்வு குறிப்பிட்ட நியதிகளின்படியே நடந்து வருகிறது. அந்த விதிகளையே நாங்கள் கண்டுபிடித்துப் போதிக்கிறோம். அண்டங்களின் ஆரம்பம், மனிதன், மிருகங்கள், சகல சடப்பொருள்களின் தோற்றம் ஆகியவை பற்றி நாங்கள் பரிசீலனை செய்கிறோம். இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் சூரியன் காலக்கிரமத்தில் குளிர்ச்சியடைந்து போனால், உங்களுக்கு என்ன நேரும் என்பதைக்கூட ஆராய்கின்றோம். மனிதன், விலங்கு, செடி கொடிகள் ஆகிய எல்லாவற்றின் முந்திய நிலைமை, இனிவரும் நிலைமை முதலியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/31&oldid=1122047" இருந்து மீள்விக்கப்பட்டது