பக்கம்:வாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
வாழ்க்கை
 

மனிதனின் உடல் தோன்றியதை (அவன் பிறந்த தினமாகிய) காலத்தைக் கொண்டு கணக்கிட முடியும். ஆனால், அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி தோன்றியதை, அவன் எவ்வளவு தான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் கணக்கிட முடியாது. அந்த உணர்ச்சி எப்போதுமே தனக்கு இருந்து வந்ததாக அவனுக்குத் தோன்றும். அவன் பிறக்கும்போது அது அவனுடன் இருந்ததென்று அவன் அறிய முடியுமா? அவன் உடலின் பிறப்போடு சம்பந்தமில்லாத ஓர் இடத்திலேயே அது இருந்திருக்கிறது. ஆகவே, அவனுடைய உடல் பிறந்ததும், பகுத்தறிவு உணர்ச்சி பிறந்ததும் வேறுபட்ட விஷயங்கள் என்பது அவனுக்குத் தெளிவாகிறது.

மனிதன் தன் உடல் வாழ்வு எப்படி வந்தது என்பதை அறிய முடியும். அவன் தன் பகுத்தறிவு வாழ்வு சம்பந்தமாக ஆலோசனை செய்யும்போது தான் தன் பெற்றோர்களின் மைந்தன் என்றோ, பாட்டன் பாட்டிமார்களின் பேரன் என்றோ, தான் இன்ன ஆண்டில் பிறந்தவன் என்றோ கருதுவதில்லை; ஆனால், எந்தவித உறவு முறைகளையும் ஒதுக்கிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/43&oldid=1122060" இருந்து மீள்விக்கப்பட்டது