பக்கம்:வாழ்க்கை.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
59
 

வெளியே காலத்தையோ, இடத்தையோ சார்ந்ததாக இல்லை.) அறிவின் விதிகளோடு அவர் இயைந்து நடப்பதாலே, அவர் நமக்கு மிகவும் நெருங்கியவராக ஆகிவிடுகிறார்.

மற்ற மக்களைப் பற்றித் தெரிந்கொள்வதற்கு அடுத்தபடியாக மிருகங்களைப் பற்றி அறிகிறோம். நாம் நம் உடல் நலத்தை நாடுவதுபோல், அவைகளும் தத்தம் நலத்தையே நாடுகின்றன. ஆயினும், நம் அறிவுக்கு நிகரான புத்தி அவைகளுக்கு இல்லை. எனவே, அவைகளோடு நம் பகுத்தறிவு உணர்ச்சி மூலம் சம்பந்தம் வைத்துக்கொள்ள வழியில்லை.

மிருகங்களுக்கு அடுத்தபடியாகத் தாவரங்களைப் பற்றி நம் அறிகிறோம். இவைகளைக் காலத்தையும் இடத்தையும் கொண்டே அறிய முடியும். நம் அறிவுக்குரிய பொருள்களில் இவைகள் மேலும் அதிகத் தூரத்தில் ஒதுங்கியிருக்கின்றன.

தாவரங்களைப் பார்க்கிலும் தொலைவிலுள்ளவை மற்றைச் சடப் பொருள்கள். நமக்கு உள்ளதுபோல் அவைகளுக்கு அகம் ஒன்றுமில்லை. அவை நன்மை எதையும் நாடுவதில்லை. அவைகளையும் காலத்தையும் இடத்தையும் கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும்.

நம்மைக் கொண்டுதான் நாம் பிற பொருள்களை அறிகிறோம். நம்மைப் பற்றி நாம் பெற்றுள்ள அறிவே மற்றவைகளை அறிய உதவுகிறது. மிருகங்களுக்கு உரிய விதிகளைக் கொண்டு தான் அவைகளை அறிய வேண்டும். சடப்பொருள்கள் சம்பந்தமாகவும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/66&oldid=1122103" இருந்து மீள்விக்கப்பட்டது