பக்கம்:வாழ்க்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

63


அவன் அவைகளைத் தன்னிடமிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு, உடல் வாழ்க்கை, சட வாழ்க்கை என்று முன்பு தவறாக எண்ணி வந்தது முடிந்து, புது மானிட வாழ்க்கை ஏற்படுகிறது. அந்த உண்மை வாழ்க்கையில் அவன் வேலைக்கு உடலும் சடமும் உபகரணமாயும் கருவியாயும் பயன்படுகின்றன. [1]

இடத்திலும் காலத்திலும் நிகழ்வது
உண்மை வாழ்க்கை அன்று

சடப் பொருள் தனக்குரிய விதிகளின்படி அடங்கிக் கிடக்கும். ஆனால், அதே சடப் பொருள் ஒரு மிருகத்தின் உடலில் சேர்ந்திருக்கும் போது, அது தன் விதிகளோடு, அந்தப் பிராணியின் மேலான விதிகளுக்கும் உட்பட்டிருக்கும். இவ்வாறு இருந்தால்தான் அந்தப் பிராணி உயிரோடிருப்பதாகக் கருதப்படும். உயிரின் மேலான விதிகளுக்கு உட்படாமல் இருக்கும் எதையும் வாழ்வதாகச் சொல்ல முடியாது ; சடப் பொருளுக்கு உரிய பூத, பௌதிக, ரசாயன மாற்றங்களையே அதில் காணலாம். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி நடக்கவேண்டும் என்ற உணர்ச்சியே யில்லாமல், சடம்போல் கிடக்கிறது என்றால், அந்த இடத்தில் உயிரின் மேலான விதிகளின் அமல் ஆரம்பமாகவில்லை என்று கருத வேண்டும். ஒரு பிராணி தனக்குரிய விதிகளின்படி


  1. குயவனுக்குத் திகிரியும் மண்ணும் போல, மனிதனுக்கு அவனுடைய உடலும் சடப் பொருளும் பயன்படுவதாகக் கொள்ளலாம். -ப. ரா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/70&oldid=1122111" இலிருந்து மீள்விக்கப்பட்டது