பக்கம்:வாழ்க்கை.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
65
 

அறிவுக்கு அடங்கி நடந்தால், அந்த நிலையை வாழ்க்கை என்றே கருத வேண்டும். மிருக இயல்பு அறிவுக்கு அடங்கி நடப்பதே வாழ்க்கை என்ற முறையைத் தவிர, வேறு எந்த முறையிலும் நாம் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது.

இந்த வாழ்க்கை, காலத்திலும் இடத்திலும் வெளித் தோற்றம் கொண்டதாயிருப்பினும், அவைகளின் விதிகளுக்கு அது கட்டுப்பட்டதன்று. வாழ்க்கைக்கு ஒரே விதிதான் உண்டு; அறிவுக்கு ஆணவம் அடங்கி நடத்தலே அவ் விதி. ஆகவே, காலத்தையும் இடத்தையும் கணக்கிட்டு வாழ்க்கையை விவரிக்க முயலுதல், ஒரு பொருளின் அகலத்தையும் நீளத்தையும் வைத்து உயரத்தை விளக்குதலைப் போன்றது. ஆணவம் அறிவின் விதிக்கு அடங்கி நடக்க நடக்க, மனிதன் வெறும் உயிரோடிருத்தல் என்ற நிலைமை மாறி, உண்மையான வாழ்க்கை நன்றாக மலர்ந்து பரிமளிக்கும்.

காலத்திற்கும் இடத்திற்கும் எல்லை உண்டு அவற்றைக் குறிப்பிட்டுக் காட்ட முடியும். ஆனால், நன்மையை லட்சியமாய்க் கொண்டு, ஆணவம் அறிவுக்குப் பணிந்து நடக்கும்போது, காலம் இடம் ஆகியவற்றிற்கும் எல்லை யில்லாமற் போகிறது.

ஒரு மனிதன் மிருக வாழ்க்கையைவிட்டு மேலேறி உண்மையான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். முன்னால் பள்ளத்தில் கிடந்தது மாறி, இப்போது உயர்ந்த இடத்திலிருந்து அவன் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிகிறது. உயரத்திலிருந்து பார்க்கும்போது, அவன் வாழ்வு மரணத்

5
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/72&oldid=1123811" இருந்து மீள்விக்கப்பட்டது