பக்கம்:வாழ்க்கை.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
வாழ்க்கை
 

டிருப்பது மட்டுமே; அதிலிருந்து வாழ்க்கையின் உண்மையான நன்மை எது என்பதை அவன் அறிந்து கொள்கிறான்; அந்த நன்மையும் உடலின் நன்மையும் ஒத்திராமல் மாறுபட்டிருக்கின்றன.

இக் காலத்தில், மனித வாழ்க்கை பிறப்பிற்கும் மரணத்திற்கும் நடுவிலுள்ள இடைக்காலம் என்று கருதப்படுகிறது. ஆனால், இது மனித வாழ்க்கையாகாது; மனிதனின் மிருக இயல்பான ஆணவத்தின் வாழ்க்கை இது. உண்மை என்னவென்றால், சடப் பொருளில் மிருகத்தின் வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிவதுபோல், மிருகத்தில் மனித வாழ்க்கை வெளிப்பட்டுத் தெரிகிறது. (சடம் உயிர் பெறும் போது மிருகமாயும், மிருகம் பகுத்தறிவு உணர்ச்சி பெறும்போது மனிதனாயும் விளங்கும்.)

மிருக இயல்பின் தேவைகள் தெளிவானவை சாதாரணமானவை. பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மனிதனாகக் கண்டுபிடிக்க வேண்டும்! அவை பல சேர்க்கைகளோடு பின்னியிருப்பதால் அவனுக்கு விளக்கமாய்த் தெரிவதில்லை.

கண் முன்பு தெரியும் உடல் வாழ்வை உதறி விட்டுக் கண்ணுக்குத் தெரியாத பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிவது மனிதனுக்குப் பயங்கரமாயும், பெருந் துன்பமாயும் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது தன் பிறப்பைப் பற்றி அது உணர முடிந்தால் எவ்வளவு திகிலும் துன்பமும் அடையுமோ, அதுபோலவே இந்த மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஆனால், இதைத் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில், நன்றாக வெளியே தென்படும் ஸ்தூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/79&oldid=1122137" இருந்து மீள்விக்கப்பட்டது