பக்கம்:வாழ்க்கை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

73


வாழ்க்கை மரணத்தில் தானே முடிகிறது! ஆனால் வெளியே தென்படாத அறிவு உணர்ச்சி ஒன்றே உயிரளிப்பதா யிருக்கிறது.

மிருக இயல்பு வாழ்க்கையின் கல்வி

மனிதனின் உடல் வாழ்க்கை கணந்தோறும் இடைவிடாமல் நசித்துக்கொண்டே வருவதையும் அது மரணத்தை நோக்கி வேகமாய்ச் சென்றுகொண்டிருப்பதையும், இவற்றால் அது அவன் வாழ்க்கையாயிருக்க முடியாது என்பதையும் அவன் கண்டு கொள்கிறான். எத்தனை எதிர்வாதங்கள் கூறினும், இந்த உண்மையை அவனிடமிருந்து மறைக்க முடியாது.

மனிதனுடைய உடல் வாழ்வில், குழந்தைப் பருவத்திலிருந்து கிழப் பருவம், மரணம் வரையும், அவ் வாழ்வின் சக்தி செலவழிந்து குறைந்து கொண்டே வருகிறது. இறுதியில் மரணம். ஆகையால், இந்த வாழ்வு அவன் வாழ்வா யிருக்கமுடியாது. படம் வாழ்வின் நோக்கம் தான் அழிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் மேய்தும் அழிவும் அந்த நோக்கத்திற்கு நேர் மாறாக எற்படுகின்றன, இத்தகைய வாழ்வு தீமையானது. ஏனென்றால், மனித வாழ்வின் அர்த்தம் அது நன்மையில் நாட்டங் கொள்வதே.

மனிதனுக்கு உண்மையில் எது நன்மையாக இருந்த போதிலும், அவன் தன் உடல் வாழ்வின் நலனைத் தியாகம் செய்து தீரவேண்டியிருக்கிறது.

உடல் வாழ்வின் நலத் துறப்பதே மனித வாழ்க்கையின் நியதி, சட்டம். சுயேச்சையாகப் பகுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/80&oldid=1123822" இலிருந்து மீள்விக்கப்பட்டது