பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 வெளிவேலைகளை யெல்லாம், வெளியில் சென்று பெண்களே செய்ய வேண்டும் ; பெண்கள் செய் யும் வீட்டு வேலைகளே யெல்லாம், வீட்டிலிருந்து ஆண்களே செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் அரசாங்கத்தின் மூலமாகப் பிறப்பித்துப் பார்ப் போம். இச்சட்டம் ஒரு நாளைக்குமேல் நடக்காது. எங்கும் குழப்பம், கண்டனக் கூட்டம்-கண்டனத் தீர்மானங்கள்-வேலை நிறுத்தம்-செய்தித் தாள் களில் (பத்திரிகைகளில்) கண்டனத் தலையங்கம்என்னும் இவைகளே மறுநாள் தாண்டவமாடத் தொடங்கிவிடும். ஒருவேளை, பிள்ளை பெறும் இயற்கை யமைப்பைப் பெண்களிடத்திலிருந்து ஆண்கட்கு மாற்றி விட்டால் இச்சட்டம் ஒழுங்காக (அமுலில்) நடை பெறலாம். யார் செய்வது அப்படி ? எனவே, குழந்தை வளர்ப்பு, பொறை (கர்ப்பம்), பொறையுயிர்ப்பு (பிரசவம்) முதலிய இயற்கைத் தடைகள், பெரும்பாலான குடும்பங் களில் பெண்களைக் கட்டுப்படுத்தி விடுகின்றன. ஆனால், பெண்கள் வெளியே வரக்கூடாது என்னும் பேதைமை கொண்டு இங்கு எழுத வர வில்லை. இயன்றவரை இயன்றதை யாரும் செய்ய உரிமையுண்டு. ஆராய்ந்து பார்த்தான் மனிதன் ; ஐந்தாறு குழந்தைகளைப் பெற்றுக் காப்பதே பெண் னுக்குச் சரியாயுளது. அந்தோ மேலும் அவளை வெளிவேலைக்கு விடாமல் நாம் உழைத்து ஊதியம் தேடி வந்து உண்போம் என்று முடிவுகட்டி, பெண்ணே வீட்டில்விட்டு, தான் நாட்டிலும், காட் டிலும் சென்று உழைக்கத் தொடங்கினன், உண்மை இவ்வளவே! ஏன்-பெண்களுக்குள்ள பெயரைப் பார்ப்போமே! வீடாகிய மனையில் இருப்பதால் மனைவி' என்னும் பெயரையும் வீடாகிய இல்லில் இருப்பதால் இல்லாள் :