பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 என்பதை யறிந்தான். இன்றைக்கு நாகரிகமாக வாழ்கிருன். இம்முறையைப் பின்பற்ருதவர்கள் இன்றைக்கும் நாகரிகம் அற்றவர்களேயாவர். இவ்விதத்தில், உலகில் தென்னிந்தியர்கள் மிக மிக நாகரிகம் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள் ளும் பெருமையில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு ©.6öᏈᎢ Ꮮ.ᎧᎧᎧᎧᎫfᎢ வாழ்க்கையின் நோக்கம் எனவே, மக்கள், பல நல்ல நோக்கங்களையும், நன்மைகளையும் கருத்திற் கொண்டே, குறிப்பிட்ட ஆணும் பெண்ணுமாகக் கூடிக் குடும்பம் நடத்தக் கற்றுக் கொண்டனர் என்பது புலகுைம். அங் நோக்கங்களுள் மிகவும் இன்றியமையாதவைகள் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் காத்தல், உறவினரையும் விருந்தினரையும் போற்றல், உலக வளர்ச்சிக்கான நன்மக்களைப் பெற்று நன் முறையில் வளர்த்தல், குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை நல்ல முறையில் திறம்பட ஈட்டி, நல்ல முறையில் செலவிடுதல் முதலியன வாகும். பெண்டிரின் சிறப்புரிமை கணவன், மனைவி எலும் இருவரும் குடும்பம் என்னும் தேரை யிழுக்கும் இரு குதிரைகளா யினும், குடும்பப் பொறுப்பில் பெரும்பங்கு கொள் பவர்-குடும்பம் என்னும் பெயர் வழங்கப்படு வதற்கே காரணமாயிருப்பவர்-பெண்மணிகளே ! இன்னுங் கேட்டால், இயற்கையமைப்பே அவர் களே அப்படி அமைத்திருக்கின்றது. ஆதலின் அவர்கள் ஆடவரினும் அதிகமாக வீட்டோடு தொடர்பு கொள்ள வேண்டியவரா யுள்ளனர். வேண்டுமானல், இப்பொழுது ஆண்கள் செய்யும்