பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 திங்கள் (சந்திரன்) குடும்ப வாழ்க்கையே என்ருல் வரும் தவருென்றுமில்லை. என் ? குடும்ப வாழ்க்கை இல்லாவிடின், உலகில் பிறப்பேது ? குழந்தையேது ? மக்கள் ஏது ? துறவிகள் ஏது ? உணவுகள் ஏது? உலகந்தான் எது? குடும்பமே உலகம் உலகமே குடும்பம்! விளக்கிச் சொல்ல வேண்டுமானல், பல உறுப்புக்களின் தொகுதியே உடம்பாக கிற்றல்போல, பல குடும்பங்களின் கூட் டுறவே உலகம் என்னும் கருத்தை மேளதாளத் தோடு வரவேற்கலாம். ஆனல், முதல் மனிதனின் தோற்றத்திற்கு முன் உலகம் இல்லையா ? உலகம் இன்றி மனிதன் எப்படித் தோன்றின்ை ' என்று வினவலாம். ஒருவரும் இல்லாத நிலையில், உலகத் தைப் பற்றிக் கவலைப்பட எம்மனிதன் விரும்பு வான் ? எனவே, குடும்ப வாழ்க்கையின் உயர்வு புலப்படும். கணவனும் மனைவியும் குடும்பம் என்னும் நாடக மேடையில், வாழ்க்கை யென்னும் நாடகத்தை நடிக்கும் நாடக ஒவியர் பலர். அவர்களுள், தலைமை நடிகர்க ளாகிய காதலன்-காதலியாக நடிப்பவர் கண வனும் மனைவியுமே! இவர்கள் ஒருவரோடொருவர் கூடி வாழக் காரணம் என்ன ? தனித்து வாழக் கூடாதா? தேவையுள்ளபோது மட்டும் கூட்டி, பின்பு பிரிந்து வாழலாகாதா? என்ருல் முடியாது. ஏன் ? முதலில் மனிதன் அப்படித்தான் வாழ்ந் தான். வாழ்ந்தான் என்ன-அப்படி வாழ் வதையே அவன் ஆதிகாலத்தில் அறிந்திருந்தான். ஆல்ை, அறிவு முதிர முதிர, நாகரிகம் வளர வளர, ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருத்திக்கு ஒருவனும் என்று வரையறை செய்து கூடி வாழ்வதுதான், வசதியும் வளமும் பெற்ற உண்மை வாழ்வாகும்