பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆதரிப்பதாக ஒத்துக்கொண்டு ஆட்சியைப் பெற் றுக்கொண்ட அவ்விரு பெண்களும், நாளா வட் டத்தில் தந்தையைக் கவனித்துக் காப்பாற்ருமல் வெளியேற்றி விட்டனர். அஃதறிந்த மூன்ரும் பெண், தமக்கையரின் கல்நெஞ்சிற்கு வருந்தி, தந்தையைத் தான் அழைத்துக்கொண்டு வந்து அகங்கனிந்த அன்போடு ஆதரித்து வந்தாள். கணவனிடம் அதிக அன்பு செலுத்தவேண்டும் என்னும் கடமையை உணர்ந்த-கள்ளங் கபடற்ற அக்காரிகை, தன் தந்தையைக் காக்கவும் தவற மாட்டாளல்லவா. கடமை பெரிதன்ருே ? மேற்கூறியவாறு முதிர்ந்த அன்புச் சங்கிலி யால் பிணேக்கப்பெற்றி மணமக்களின் வாழ்க் கையே வளம் பெறும் என்பதற்காக இவ்வரலாறு இங்கு எடுத்துக்காட்டப் பெற்றதேயன்றி, பெண் மக்களே ! உங்கள் தந்தையர்மேல் விருப்பம் வேண் டாம் ; கணவனுக்கே தொண்டு செய்யுங்கள் என்று விளம்பரம் செய்து, பெண்ணேப் பெற்ற வரின் பெருஞ் சினத்திற்கு ஆளாவதற்காக இஃது எழுதப் படவில்லை. பிற்பாடு சிறிய பெண்ணே பெற்றவரைக் காத்ததாக வரலாறு முடிவதால் பிழையொன்றும் நேராதென் றெண்ணுகிறேன். குடும்ப வாழ்க்கை உலகிலுள்ள குழந்தை வாழ்க்கை, விளையாட்டு வாழ்க்கை, பள்ளிக்கூட வா ழ் க் ைக, தனி வாழ்க்கை, துறவற வாழ்க்கை முதலிய வாழ்க்கை வகைகள் எல்லாம் சிற்றரசர்கள் என்றல், அவற் றிற்குத் தலைவனுய் முடிசூடித் திகழும் பேரரசன் குடும்ப வாழ்க்கையே! ஏனைய வாழ்க்கைகள் எல் லாம் விண்மீன்கள் (நட்சத்திரங்க்ள்) என்ருல், அவற்றிற்கு நடுநாயகமாய்த் தலைமை தாங்கும்