பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{2 செய்பவர் மனைவியரே! இத்தகைய மனைவியைப் பெற்ற ஆடவனுக்கே வாழ்க்கை சுவையாகும்! கணவர்க்குத் தொண்டு ரு செல்வ மகள். விலையுயர்ந்த புடவையைக் கட்டிக்கொண்டே தயிர் கடைந்தாள். அவ்வமயம் அடுப்பின் மேல் வைத்திருந்த உணவு கொதித்து வழியத் தொடங்கிற்று. அஃதறிந்த மங்கை தயிர் கடைவதை நிறுத்தி விரைந்தெழுந்தாள். உடை நெகிழ்ந்தது. விலையுயர்ந்த ப்ட்டுப் புடவை யென்றும் எண்ணுமல், தயிர்க்கையாலேயே புடவையைக் கட்டிக்கொண்டே அடுப்பருகில் ஒடி ள்ை. தாளிதப் புகை கண்ணேயும் மூக்கையும் அப்புவதையும் பொருட்படுத்தாது தாளிதம் சய்து சமைத்தாள். ஏன்-சமைத்த பின் தயிர் கடையலாமே? உணவு அடுப்பில் இருக்கும் போதே தயிர் கடைந்தது எதற்காக? தயிர் கடைங் தால்தான் என்ன-கடைந்து முடித்துவிட்டுப் போய்த் தாளிக்கலாமே ? என்ற ஐயங்கள் தோன் றலாம். தயிர் கடைவதையும், சமையலையும் ஒரே காலத்தில் செய்தால் சமையல் விரைவில் முடியும். உரிய நேரத்தில் தாளித்தால்தான் உணவு சுவை கெடாமல் பதமாக அமையும். எனவே, விரைவில், சுவை மிக்க உணவைக் கணவனுக்குப் பரிமாற வேண்டும் என்னும் காதலாலேயே அப்பெண்ணி னல்லாள் அங்கனம் செய்தாள் என்பது தெளி வாகுமன்ருே ? அவ்வுணவை உண்டு கொண் டிருந்த கணவன், சுவையைப்பற்றிப் பலபடப் புகழ்ந்தான். அதைக்கேட்ட அப்பெண்ணின் முகத்தாமரை, பிறர் பார்க்கப் போகிரு.ர்கள் என்ற நாணத்தோடு மிக நுட்பமாக மலர்ந்தது. இங்கிகழ்ச்சி, ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்