பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 விடாமல் பலர்க்கும் பகுத்துக் கொடுத்தும் உண் னும் தம் கூழ்ே மிகச் சிறந்ததாகும். இதனை, தித்திக்கத் தித்திக்கத் தேனுெழுகும் தெய்வத் திருக்குறள் ஒன்றல் தெளியலாம். - தன் காதலியோடு கலந்து சிற்றின்பம் நுகர்ந்த ஓர் ஆண்மகன், தான் பெற்ற இன்பத் தைப் புகழக்கருதி, அதனினும் சிறந்ததோர் இன்பத்தை அதற்கு உவமையாகக் கூறலானை : என் காதலியோடு கலந்து யான்பெற்ற இன்ப மானது, தம் வீட்டில் (மனைவியுடன்) இருந்து கொண்டு, தாம் தேடிய சொந்த உணவைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும் இன்பம் போன்றுள்ள்து ' என்பதே அவன் புகழ்மொழி. இக்கருத்து, திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள " தம் இல் இருந்து தமதுபாத்து உண்டற்றல் அம்மா அரிவை முயக்கு" என்னும் குறளில் ஈயம்பட நவிலப்பட்டுளது. பெண்டிரால் பெருமித நடை தாய் வீட்டில் செல்வமாக வளர்க்கப்பட்டு வந்த பெண், கணவன் வீட்டிற்கு வந்ததும் மிக்க பொறுப்புணர்ச்சி உடையவளாக மாறிவிடுகின் ருள். தாயிடம், கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி, விருப்பம்போல் விளையாடிக் கொண்டிருந்தவள், இங்கே எழுந்ததிலிருந்து துரங்கும்வரை கணவற் காகவும், குழந்தைகட்காகவும் ஒடியோடி உழைக் கின்ருள். அங்கு உப்பு நுணுக்கவும் முடியா தென்று விளையாடியவள், இங்கு மலையைப் புரட்டுகின்ருள். வீட்டுப் பொருள்களைச் சிதருமல் காக்கின்ருள். கணவற்கு நோய் வந்து விட்டால் மருத்துவர் போல் கின்று மருத்துவம் பார்க் கின்ருள். தாய்போல் அமைந்து உணவூட்டுகின்