பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முள், அமைச்சன்போல் அமர்ந்து அறிவு புகட்டு கின்ருள். பணியாளரைப் போல் பணிந்து ப புரிகின்ருள். நண்பனைப் போல் நின்று உயிர் காக்கின்ருள். சிற்றின்பமும் சேரச் செய்கின் ருள். இங்ங்னம் பலவகையிலும் உதவி, கணவ லுடைய மானம் கப்பல் ஏருதபடிக் காக்கின்ருள். கணவனுக்கு இன்னும் என்ன நன்மைகள் இயற்ற வேண்டும்! இத்தகைய மனைவி வாய்க்கப்பெற்றவரே நற்பேறுடையவர். வாய்க்கப் பெருதவர்க்கு, உம் மனைவியிடம் ஒன்றும் செல்லவில்லையே? என்ற பழிச் சொல் வரும் என்ற அச்சத்தால், அந்தோ தம்மை இகழ்ந்து பேசும் எதிரிகளின் முன் சிங்கம்போல் நடக்கும் பெருமித நடை தோன்றுவதற்கு வழியில்லை யன்ருே ? இதனை, புகழ்புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை' - என்னும் திருக்குறள் தெளிவுபடுத்துகின்றது. ஏன், உலக வரலாறுகளையும், நிகழ்ச்சிகளையும் உற்று நோக்கினலே உண்மை புலனுகுமே! 2. விருந்தோம்பல் தெய்வப் புலவர் திருவள்ளுவனர் தெரிவித் துள்ளபடி, தன் காத்து, தன்கொண்டான் பேணி, தகை சான்ற சொல் காத்து, சோர்வி லாள் ஆகிய பெண் தம் வீட்டிற்கு வரும் விருங் தினரையும் போற்ற வேண்டும். தேவாமிர்த மாலுைம், விருந்தினரை வெளியே விட்டுத் தாம் மட்டும் உண்பது மனிதத் தன்மைக்கு அழகே யன்று. மருந்தேயாயினும் விருந்தோடு உண் என்பதை மறக்கமுடியுமா ? மறுக்க முடியுமா ? காக்கையும் அன்ருே இனத்தை அழைத் துண்ணு