பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஒளவையார் ஏமாற்றம் விருந்தோம்புதலின் பெருமை யறியாத பேதையர் சிலர், விருந்தினரைக் கண்டதும் ஒடிப் பதுங்குகின்றனர். சில வீடுகளில் கணவன் விருந் தினரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய முடியாது. தவறி நுழைந்தாலோ புடவை கட்டிய புலி பாயும் பாவையெனப் பெயர்பெற்ற பாம்பு சீறும். இங்கிலையில், விருந்தினரைக் கண்டால் தலைமறைவாய்ப் போகாமல் வேறென்ன செய் வான் கணவன். விருந்தினரை அழைத்து வந்த தால், மனேவி கணவின் தலையில் சட்டியையிட்டு உடைக்க, அது வளையம்போல் கழுத்தை அலங் கரித்த கதையை, 'வீணுய் உடைந்த சட்டி வேண துண்டு என் தலையில், இந்தப் பூணுரம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை' என்னும் அடிகள் அறிவிக்கவில்லையா ? ஒரு சமயம், ஒரு வீட்டின் வெளித்திண்ணேயில் விருந்தாக அமர்ந்திருந்தார் ஒளவையார். அவரை எப்படியாவது உண்ணச்செய்ய வேண்டும் என்பது அவ்வீட்டு ஆடவனின் ஆவல். அவன் மனைவியோ கொடுமைக்கு இருப்பிட்ம். விருந்து வந்துள்ள தென அவளிடம் விளம்பவும் அச்சம். ஆதலின், அவளைத் தன்வயப் படுத்துவதற்காகச் சில தொண்டுகள் செய்ய முற்பட்டான். அவள் அரு கில் சென்ருன். தலையிலுள்ள ஈரையும் பேனையும் எடுத்தான். கூந்தலைக் கோதி முடித்தான். தண் ணிாால் முகத்தைத் துடைத்துத் தூய்மை செய் தான். பொட்டிட்டான். மற்றும் பணிவிடைகள் பல புரிந்தான். இனி நம் வேண்டுகோளை மனேவி ஏற்கலாமென அரை குறையாய் நம்பின்ை. கட்டிக்கொணடான் கையை, மெதுவாக, விருந்து வந்துள்ளதென்று விண்ணப்பம் செய்தான்.