பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அவ்வளவுதான், அம்மைக்கு வந்தது சினம். எழுந்தாள்; ஆடினுள்; சரமாரியாகப் பாடினுள் சில் பாடல்களே; அவன் ஓடினன் ; விடவில்லை; தானும் ஓடினுள்; பழமுறத்தாலும் சாடினள். பார்த்தார் ஒளவையார். அந்த வேகம் தன் பக்க மும் திரும்பிவிடுமோ என்று அஞ்சினர். இவ் வளவு நேரம் உண்ணக் காத்திருந்து ஏமாந்து போன அவர் வாய், உண்பதற்குப் பதிலாக, இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி விருந்துவந்த தென்று விளம்ப-வருந்திமிக ஆடினுள் பாடினுள் ஆடிப் பழமுறத்தால் சாடினுள் ஒடிமுன் தான் என்று பாடத்தொடங்கி விட்டது. இத்தகைய கொடிய நிலை குடும்பத்தில் கூடவே கூடாது. குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொள்ளலாமா ? இன்பத்திற்கன்ருே குடும்பம் துன்பத்தைத் அாரத்தில் ஒட்டுவதே அறிவுடைமையாகும். ஆட வர்க்கு மனமில்லாது போயினும், பெண்டிர் விரும் பினல் விருந்தோம்ப முடியும். ஆதலின் அவர் கள் அக்கலையை மறவாமை கடமையாகும். 3. குழந்தை வளர்ப்பு மங்கலம் என்ப மனேமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு ' என்ருர் வள்ளுவர். உலகில் குழந்தைகள் பிறப் பது நின்றுவிடின் எதிர்கால 'உலகமே இல்லை யென்ருல், குடும்பத்தில் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று சொல்லவா வேண்டும்? குழந்தை யில்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா? பல பொருள் களையும் படைத்துப் பலரோடுண்டு மகிழக்கூடிய அளவு பெருஞ் செல்வராய் மட்டும் இருந்தால் போதுமா ? அல்லது, உலகமெல்லாம் ஒரு குடைக்