பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கீழ் அமையப்பெற்று, முடிசூடிய மன்னராய் விளங்கில்ைதான் போதுமா ? தம்பிள்ளைகள் பேசுகின்ற, யாழ்-புல்லாங்குழலினும் இனிமை யான மழலைச் சொற்களைக் கேட்டு மகிழவேண் டாமா ? குறுகுறுவென நடக்கும் நடையைக்கண்டு பெருமிதம் பெற வேண்டாமா ? தம்மேல் படுத்துப் புரண்டு, கையை நீட்டிக் காலால் உதைக்கும் உதையை ஏற்று இன்புற வேண்டாமா ? உண் னும் உணவில் கையையிட்டுத் துழாவி வாயில் வைத்துக்கொண்டு, தம்மேலும் பூசி நகைக்கின்ற குழந்தையின் செயலைக்கண்டு களிகூர வேண் டாமா ? இதுவன்ருே சுவையுடைய வாழ்க்கையா கும். இக்கருத்து, பாண்டியன் அறிவுடைநம்பி என்னும் அரசனுல் பாடப்பட்ட படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு கடந்தும் சிறுகை நீட்டியும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை வில்லைத் தாம்வாழு நாளே ' என்னும் பு:மநானூற்றுப் (188) பொற் பாடலால் புலகுைம். - அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் ' ' குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் ' என்று நம் வள்ளுவரும் நயம்பட நலின்றுள்ளா ரன்முே ?