பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாய் எப்படி-மகள் அப்படி கொஞ்சுவதற்குக் குழந்தை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா ? நன்முறையில் வளர்க்கவும் தெரியவேண்டும். தாய் எப்படி-மகள் அப்படி , தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால் மகளே வீட்டில் பார்க்கவேண்டியதில்லை' என்னும் பழ மொழிகள் அறிவிப்பதென்ன ? பெற்ருேர்க் வளின் குணமே பிள்ளைகட்கு இருக்கும் என்பது இவற்ருல் விளங்கவில்லையா ?- பிள்ளைகள் ஒழுங் காய் இருக்கவேண்டுமானல், பெற்றேர்களும் அவ் விதம் நடந்துகாட்ட வேண்டும். அதிலும், உட னிருந்து வளர்க்கும் உரிமைபெற்ற தாய் ஒழுங் கானவளாக ஒழுகவேண்டும். சில பிள்ளைகள், தாய்மார்களின் தீக்குணங் களைக் கண்டு தாமும் பழகிக்கொள்கின்றனர். கண்டவுடன் தாமாகவே பழகிக்கொள்ளும் பிள்ளை கட்கு, தீக்குணங்களைக் கற்றுக்கொடுக்கும் தாய் மார்களும் உண்டு. பிறரைத் திட்டவும், பிறர் பொருளை எடுத்துக்கொண்டு வரவும் கற்றுக் கொடுப்பார்கள். இப்பழக்கம் எள்ளத்தனையும் கூடாது. தாம் ஓர் ஆசிரியர் (குரு)போல் இருந்து நல்ல கருத்துக்களைப் புகட்டவேண்டும். நல்ல பழக்க வழக்கங்களில் திருப்பவேண்டும். பிற்கால - வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக்கூடிய வேலை களைத் திறம்படக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகட்கெதிரில் கெட்டதைப் பேசுவதோ, செய்வதோ பெருந்தவறு. கெட்டதைப் பேசின லும், செய்தாலும் அம்மா வருந்துவார்கள் என்ற அச்சம் பிள்ளைகட்கு உண்டாகும்படித் தாய்மார்கள் கடந்துகொள்ளவேண்டும்.