பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வீரம் ஊட்டல் சில தாய்மார்கள் - சிலரென்ன - பலரும், பிள்ளைகளை அடக்குவதற்குத் தம் மிரட்டலைப் பயன்படுத்துவதில்லை. பூனை, பூச்சாண்டிகளைக் காட்டியே அச்சுறுத்துகின்றனர். உமாதேவி திருஞான சம்பந்தருக்குப் பால் ஊட்டியபோது சர்க்கரைக்குப் பதில் ஞானத்தைக் குழைத்து ஊட்டியதாகப் புராணங்கள் புகலக் கேட்டுள் ளோம். அது மிக நன்ரு யிற்றே. ஆனல், நம் தாய்மார்களோ, குழந்தைகட்குப் பால் ஊட்டும் போது, கூட அச்சத்தையும் குழைத்து ஊட்டி விடுகின்றனர். என்னே பேதைமை சிறு வயதில் ஏற்பட்ட இவ்வச்சம், பெரியவர்களான பின்னும் வாழ்க்கையைப் பெரிதும் தாக்குகின்றது. தொட் டில் பழக்கம் கடைசி வரையுமன்ருே ? ஆதலின் குழந்தைகளைக் கோழைகளாக்கக் கூடாது. வீரம் ஊட்டி வளர்க்க வேண்டும். வீரமும் தீய வழிகளில் செலுத்துவதாய், இருத்தலாகாது. பிள்ளைகட்கு வீரம் வரவேண்டுமாயின், முதலில் தாய்மார்கட்கும் வீரம் வேண்டும். பண்டைக் காலத்திலிருந்த கிழவி யொருத்தி, சிறுவ னென்றும் பாராது, தன் ஒரே மகனை யழைத்து அலங்கரித்து, போருக்குப் போய் வெற்றி பெற்று வா குழந்தாய் என்று கூறி அனுப்பியதாகப் புற நானூற்றுப் பாடல் ஒன்று அறிவிக்கின்றது. இக்காலத்துப் பெண்டிரோ, மகன் பட்டாளத்திற் குப் புறப்பட்டாயிைன் கூக்குரல் கிளப்புகின் றனர். இது கோழையின் அறிகுறி. தள்ள முடியாத கட்டாயம் ஏற்படின், தாமும், அயல் நாட்டுப் பெண்களைப் போல் போர்க்களத்தின் முன்னணியில் கிற்கவேண்டும். இத்தகைய தாய்மார்களின் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளே