பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வீரமணிகளாகத் திகழ்வார்கள். புலிக்குப் பிறந்த தும் பூனேயாகுமா ? - கடமைகள் ஒவ்வொருவரும் தம் கடமையுணர்ந்து ஒழுக வேண்டியது கட்டாயம் அல்லவா ? பொன்மொழி யார் என்னும் புலவர்-புலவரென்ருல் ஆடவர் அல்லர்-பெண் புலவர்-புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ஒவ்வொருவருடைய கடமைகளையும் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளைப் பெற்று வளர்த்தல் பெண்ணுகிய என் கடமை; அப்பிள்ளை யைக் கல்வியறிவிற் சிறந்தவனுக்குதல் தந்தைக் குக் கடமை ; அவன் போர் செய்தற்கு வேல் முதலிய படைகளை வடித்துத் தருதல் கொல்லன் கடமையாகும். அவனுக்கு நல்ல சிறப்புச் செய் தல் அரசன் கடமையாம். போர்க்களத்தில் முன் னணியில் நின்று, எதிரிகளின் யானைகளைத் தன் உடைவாளால் வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுதல் காளையாகிய என் மகனுக்குக் கடமையாகும்.' என்னும் கருத்தில், - ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடன்ே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ' என அழகாகப் பாடியுள்ளார் அவ்வீரப் பெண் புலவர். கணவன் போர்க்குச் செல்லத் தயங்கிய போது, ' என் பெண் உடையை நீ கட்டிக்கொள்! உன் ஆண் உடையை எனக்குக் கொடு ! நான் போர்க்குச் சென்று வெற்றி பெற்று மீள்வேன் s