பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 என்று முழங்கிய வீரப் பெண்மணிகள் பிறந்த நாடே நாம் பிறந்து வாழும் பொன்டுை. பிள்ளை கட்கு வீரம் ஊட்ட வேண்டுமானல், பெண்கட்கும் வீரம் இருக்க வேண்டும் என்னும் கருத்தை வற் புறுத்துவதற்காக இவ்வளவு எழுதினேனே தவிர பெண்கள் காளிகளாகிக் காட்சியளிக்க வேண்டும் என்று கதை கட்டியதாக யாரும் கசப்படைய மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். கண்டிப்பு சில தாய்மார்கள், பிள்ளை எவ்வளவு குறும்பு செய்தாலும் விட்டுக் கொடுக்கின்றனர். எதைக் கேட்டாலும் தருகின்றனர். எனவே, சில பிள்ளை கள் கெடுவதற்கும், மறைவதற்கும் தாய்மாரே காரணம் என்பதில் தடையொன்று மில்லை. செல் லம் தரவேண்டிய நேரத்தில் செல்லம் தரவேண் டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்க வேண்டும். அறியாமையோடு கூடிய அன்பினல் கேட்ட பண்டங்களை யெல்லாம் தின்பதற்குத் தராமல், அளவாக நடந்து, அடக்கி ஒடுக்கிவளர்க்க வேண்டும். அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்குப் பயன் ? கல்வியும் கட்டாயமும் அழகாக, அலங்காரமாகப் பிள்ளையை வளர்த்து விட்டால் போதுமா ? காகிதப் பூவுந் தான் அழகாக, அலங்காரமாக இருக்கிறது. ஆனல் நறுமணம் இல்லையே! அந் நறுமணம் போன்ற கல்வியை அளிக்காமல் பிள்ளையை வளர்ப்பவர்கள், காகிதப்பூச் சூடுபவரையே யனே யர். உலகப் பொருள்கள் பல. அவற்றுள்