பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரும்பாலன, பிறரால் பறிக்கப் படலாம்; அழிக்கப்படலாம். நாமாகவே பிறர்க்கும் கொடுத் தாலும் குறைந்து விடலாம். கல்விப் பொருள் அத்தகையதோ? யாராலும் அழிக்கப்படாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்து, புகழை நிலைநிறுத் தும். எனவே, இத்தகைய கல்வியையன்றே பெற்றேர்கள் தம்பிள்ளைக்குத் தேடிவைத்துச் செல்லவேண்டும். இக்கருத்தை, வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க அரசர் செறின் வவ்வார் இப்புவியில் எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன. விச்சை மற் றல்ல பிற ' என்று நாலடியாரும் நவில்கின்றது. இதனில் பெற்ருேர்க்கு மிகவும் கருத்திருக்க வேண்டும். கல்வியே கட்டாயம் என்பதைக் கட்டாயம் உணர வேண்டும். அஃதறிந்து பிள்ளைகளும் கல்விச் செல்வத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ் விருபதாம் நூற்ருண்டில், கல்வியில்லாத பிள் ளையோ, அத்தகைய மூடப் பிள்ளையைப் பெற்று வளர்த்த பெற்ருேரோ உல்கத்திற்குச் சுமையே என்று சொன்னல், சொல்பவர் மேல் வருந்திப் பயனில்லை. - ஒத்துழைப்பு இது காறும், குடும்பப் பொறுப்புக்கள் அனைத்தையும் பெரும்பாலும் பெண்கட்கே உரித் தாக்கி வந்தோம். ஆயினும். ஆண்கட்கு அவற் அறுள் பங்கு இல்லையென்று தள்ளமுடியாது. ஆண்களுக்குப் பெண்கள் எவ்வளவு நன்மைகள் செய்கின்ருர்களோ, அவ்வளவு நன்மைகளை ஆண் களும் பெண்கட்குச் செய்யக் கடமைப்பட்டுள்ளார் கள். எனவே, ஆண்கட்கு உழைக்கவே பிறந்த