பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வேந்தனுக்கோ பெண்களின்மேல் வெகு பிரி யம். வயதோ முதிர்ந்தது. உடல் தளர்ந்தது. அண்ணன் தம்பிகளே, ஒரடி மண்ணிற்காக ஒன்பதியிைரம் வெண்பொற்காசு செலவிட்டு வழக்காடும்படிச் செய்கின்ற மண்ணுசை-தம் ஆட்சியின் கீழ் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு (சாம் ர்ர்ஜ்யம்) அட்ங்கியிருப்பினும், மேலும் பிறர் நாட் ட்ைப் பிடிக்கத் தூண்டுகின்ற பேராசை பெற் றெடுத்த குழந்தையாகிய மண்ணுசை, லீயர் மன்னனிடத்து விடைபெறத் தொடங்கியது. காரணம்...? ஆண்டுகள் பலவாக ஆண்டு ஆண்டு அலுத்துப்போயிற்று அவன் ஆவல். முதுமையும், அதன் குழந்தையான ஒய்வு மனப்பான்மையும் அவனை இறுகத் தழுவிக்கொண்டன. எனவே, அவன் ஆட்சியைத் தம் அரும்பெரும் மக்களிடத் தில் ஒப்புவிக்கத் தொடங்கியதில் வியப்பொன் றும் இல்லையல்லவா ? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது உண்மையாயினும், ஆண்டு அநுபவித்து அடங்கிய அறிவுடையோர்க்கே இந் நிலை கைவரப்பெறு மன்ருே ? வேந்தன் மூத்த மகளே அழைத்தான். 'என் செல்வமே! எனக்கோ வயது முதிர்ந்து விட்டது. கருத்தை ஆட்சியில் செலுத்த முடியவில்லை. ஒய்வு தேவைப்படுகின்றது. உனது கருத்தென்ன ? என்னைப்பற்றி நீ என்ன எண்ணிக்கொண்டிருக் கிருய்? என்மேல் எவ்வளவு அன்பு வைத்துள் ளாய் ? என்று வினவினன். கேட்ட கானரில், மதிப்பிற்குரிய தந்தாய்! என் உடல், உயிர், குடும் பம், இவ்வுலகம் என்னும் எல்லாவற்றைக் காட்டி லும் உங்கள் மேலேயே எனக்கு விருப்பம் மிகுதி. நீங்களின்றி நானில்லை. உடலின்றி உயிரோ, உயிரின்றி உடலோ உலகில் விளங்கமுடியுமா ?” என்ருள். கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட