பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்விக்க வந்த பாரதி சொல்லும் எழுத்தும் கருத்தைத் தெளிவாக வெளி யிட உதவவேண்டும். சுரக்கும் சிந்தனைகளை மறைக்கும் சொற்கள் உயிரற்றவை; திங்கானவை. எண்ணியதை எண்ணியவாறு எழுதாத எழுத்துக்கள், எலும்புத் துண்டுகள். உணர்ந்ததை உணர்ந்தவாறு உரைக்கும்போதே, சொற்கள் உயிர்ப்பைப் பெறுகின்றன; ஒளிவிடுகின்றன. s - - # # * உண்மையாகக் கொப்பளிக்கும் சொற்கள் ஒளிவிடும்; நெடுநாள் ஒளிவிடும். சொல்லும் எழுத்தும் போலவே, கவிதைகளும் உண்மையிலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். நல் லுணர்வு களாகப் பொங்கவேண்டும். - கொதிநீர் ஊற்றுகளாகக்கூட இருக்கலாம். ஆயினும் அழுக்குநீர் ஊற்றுகளாக மட்டும் இருத்தல் ஆகாது. நன்னீராகவோ, மருந்து நீராகவோ இயற்கையாகப் பொங்குபவை, கவிதைகள். உவமை நயங்கள், கற்பனை