பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வளங்கள், சேரவேண்டாமா? வேண்டும். அப்படிச் சேருபவை எப்படி இருக்கவேண்டும்? இயற்கையாகப் பொங்கும் கவிதை வெள்ளத்தை அழுக்குப்படுத்துவதாக இருக்கக் கூடாது. குடிநீரோடு கலக்கும் தண்ணிராக இருக்கலாம்; பாலாக இருக்கலாம்; பழச்சாருக்வும் இருக்கலாம். உணர்வின் தூய்மையை உயிர்ப்பைக் கெடுக்கும் கற்பனை கொள்ளத்தக்கது அல்ல. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று நம் தாய்த் தமிழ். அதில் பாடல்கள் செறிந்திருப்பது வியப்பல்ல. இடைக்காலத்திலும் அதற்குப் பிறகும், புராணத்தைப் பார்த்துப் புராணம், அந்தாதி பார்த்து அந்தாதி, உலாவுக் குப் போட்டியாக உலா என்னும் போக்கிலே தமிழ்ப் பாடற் புதர்கள் பெருத்தன. "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வாழவும் வேண்டும். இது மனித முயற்சிக்கு அடங்கியதே' என்பதை நம் முன்னேர் மறந்தார்கள். "வறுமையும் வாட்டமும், ஏழ்மையும் ஏளனமும், இழிவும் பழிப்பும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணத்தலைப்பட்டார்கள். இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டா லென்ன?’ என்னும் அலட்சிய மனப்போக்குப் பரவலா யிற்று. விாேவு? பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வணிகன், நம்மை நாடாளும் நிலை உருவாகியது.