பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II பலகோடி மக்கள், சிலவாயிரம் அன்னியர்களுக்கு அடிமையானர்கள். இது இழிவு என்பதைக்கூடப் பொது மக்கள் உணரவில்லை. இங்கொருவர், அங்கொருவர் மட்டுமே, நம் நாட்டிற் குத் தன்ட்ைசி உரிமை வேண்டுமென்று கருதினர்; பேசினர்; எழுதினர். அடிமையிருளில் மூழ்கி, வறுமைச் சேற்றில் சிக்கி, தற்குறித் தன்மையில் மயங்கி, இந்தியர் வாழ்ந்த நிலையில், தெற்கிலும் இடி இடித்தது; மின்னல்கள் மின்னிக் கண்ணைப் பறித்தன. இடியோசையைக் கேட்பதற்கும் அஞ்சிப் பதுங்கிய வர்கள் பலராவார். ஒளிவீசி மின்னும் மின்னலைக் காண முடியாது, கண்களை இறுக முடிக்கொண்டவர்களும் கணக்கில் அடங்கார். அந்த இடியும் மின்னலும் எவை? தேசியகவி சுப்ரமணிய பாரதியார் பாடிய கவிதை கள் இடியென முழங்கின; மீன்னலெனப் பளிச்சிட்டு ஒளி வீசின. முன்னே பலர், தத்தம் புலமையை, கெட்டிக்காரத் தனத்தைக் காட்டவே, பாடினது உண்டு. பொருள் இதுவோ, அதுவோ என்று குழம்பும்படி பாடிய புலவர்கள் ஏராளமாக உண்டு. பாரதியார், அந்த மரபிலிருந்து விக்கினர். உணர்வு ?- * : - m == i * H # களே உரிய உயிர்த்துடிப்போடு வெளிப்படு இதுவதைத தம் குறிக்கோளாகக் கொண்டார்; தமிழில் அருமையாகப் பாடினர். அது மட்டுமா? சாதாரணத் தமிழனுக்குப் புரியும் தமிழில் பாடினள். அவை கேட்டாரைச் சுண்டி இழுத்தன. படித்தோரைப்