பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 வரும் தலைமுறைகள் நினைவுபடுத்திக் கொண்டு, இறும்பூது எய்துவதற்கு மட்டுமே அது பயன்படுவதும் முறை. அறிஞனுடைய அறிவு உலகிற்குப் பயன்படவேண்டும். ஞாயிறு, உலகம் முழுவதற்கும் பயன்படுகிறது. அதுபோல் பாரதியாருடைய சுடர்மிகு அறிவு பெரும் உலகத்திற்கு உதவவேண்டும். இப்படிப் பாரதியார் வேண்டிக்கொள்ளுகிருர். அப் பாடலைப் பாருங்கள்: நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?" 'சிவசக்தியை ஏற்றுக்கொள்ளுகிறவர்களே, படித்து சிந்திக்கவேண்டிய பாடல் என்று எண்ணி, இதை ஒதுக்கி விட வேண்டாம். இப்பாடலின் உயிர்நாடிகள் இரண்டு. நிலச்சுமையென வாழக்கூடாது என்பது ஒன்று: மாநிலம் பயனுற வாழ வேண்டும் எனபது மற்ருென்று. படைப்பை நம்பாதவர்களும் ஒப்புக்கொள்ளும் இலட்சிய நாடிகள் இவை இரண்டும். அறிவு-சுடர்மிகு அறிவு - நவமணிகளைப்போன்று. எங்கோ, சில திட்டுகளிலே, ஆழப்புதைந்து கிடக்கவில்லை என்பதை, இங்கே, நினைவுபடுத்திக் கொள்வோமாக.